Archives: மார்ச் 2021

ராஜரிகத்தை உபசரிப்பது

ஸ்காட்லாந்தில் ஷிண்ட்டி (ஹாக்கி போன்ற விளையாட்டு) விளையாட்டில் இங்கிலாந்து ராணியை சந்தித்த பிறகு, சில்வியா மற்றும் அவரது கணவர் தேநீருக்காக அரச குடும்பத்தினர் அவர்களை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற செய்தி அவர்களை வந்தடைந்தது. சில்வியா சுத்தம் செய்து தயார்படுத்தத் தொடங்கினார். அரச விருந்தினர்களுக்கு விருந்தளிப்பதில் பதட்டமாக இருந்தார். அவர்கள் வருவதற்குள் மேசை மீது வைக்க சில பூக்களை எடுத்துவர அவள் வெளியே சென்றாள், அவளுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உடனடியாக, அவர்தான் ராஜாதி ராஜா என்பதையும் அவர் ஒவ்வொரு நாளும் அவளுடன் இருக்கிறார் என்பதையும் தேவன் நினைவூட்டுவதை அவள் உணர்ந்தாள். உடனே அவள் சமாதானமாக உணர்ந்தாள், “மொத்தத்தில் எப்படியிருந்தாலும், இது ராணி மட்டுமே!” என்று எண்ணினாள்.
சில்வியா யோசித்தது சரிதான். அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டது போல, “தேவன் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்” (1 தீமோத்தேயு 6:15), அவரை பின்பற்றும் யாவரும் “தேவனுடைய புத்திரர்கள்” (கலாத்தியர் 3:26). நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறோம் (வச. 29). இனி நாம் பிரிவினைகளால் கட்டுப்பட்டவர்களல்ல - இனம் சமூக நிலை அல்லது பாலின வேறுபாடுகள் போன்றவை – “நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்” (வச. 28). நாமெல்லாரும் இராஜாவின் பிள்ளைகள்.

சில்வியாவும் அவரது கணவரும் ராணியுடன் ஒரு அற்புதமான உணவு விருந்தை அனுபவித்திருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராஜாதி ராஜா ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருக்கிறார் என்ற நினைப்பூட்டலை நான் விரும்புகிறேன். இயேசுவை முழுமனதுடன் விசுவாசிப்பவர்கள் (வச. 27) தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றறிந்து ஒற்றுமையில் வாழமுடியும்.

இந்த சத்தியத்தைப் பிடித்துக் கொள்வது இன்று நாம் வாழும் முறையை எவ்வாறு வடிவமைக்கும்?

சேரி பாடல்கள்

தென் அமெரிக்காவின் பராகுவேயில் உள்ள ஒரு சிறிய சேரியில் மிகவும் ஏழ்மையான அதன் கிராமவாசிகள் அதன் குப்பைத் தொட்டிகளில் இருந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிழைக்கிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கையற்ற நிலைமைகளிலிருந்து அழகான ஒன்று வெளிப்பட்டுள்ளது - ஒரு இசைக்குழு.

இந்த சேரியில் ஒரு வீட்டை விட ஒரு
பிடில் (வயலின்) விலை அதிகமாக இருப்பதால் இசைக்குழு படைப்பாற்றலைப் பயன்படுத்தவேண்டியதாயிருந்தது மற்றும் அவர்களின் சொந்தக் கருவிகளை, அவர்களின் குப்பைகளிலிருந்தே வடிவமைக்க வேண்டியதாயிருந்தது. எண்ணெய்க் கலன்களில் வளைந்த முட்கரண்டியை வால்பகுதியாக கொண்டு பிடில் (வயலின்) தயாரிக்கப்படுகிறது. குப்பியின் மூடியை விசையாகக் கொண்டு வடிநீர் குழாய்களிலிருந்து கூடிசைக்குழுமக் கருவி (சாக்ஸபோன்கள்) உருவாக்கப்பட்டது. கழுதிப்பகுதியிலுள்ள நரம்பை ஒத்திசைவு செய்ய உருளை வடிவ தகர பாத்திரத்தில் மர சுருள்கிரிகரண்டியை கொண்டு நான்கு நரம்பு வாத்தியக்கருவி உருவாக்கப்பட்டது. இந்த முரண்பாடுகளில் மொஸார்ட் டின் இசையை ஒலிக்கச் செய்துகேட்பது ஒரு அழகான விஷயம். அந்த இசைக்குழு பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் இளம் உறுப்பினர்களின் மீதான பார்வையை உயர்த்தியது.

கீழே கிடந்தவைகளிலிருந்து பிடில் (வயலின்). சேரிகளில் இருந்து இசை. இது தேவன் என்ன செய்கிறார் என்பதின் முன்மாதிரி தான் அது. ஏசாயா தீர்க்கதரிசி தேவனின் புதிய சிருஷ்டிப்பை உருவகப்படுத்திக் காணும்போது, ​​வறுமையிலிருந்து-சிங்காரம்-வெளிப்படும் படத்திற்கு இணையானது, வறண்ட நிலம் வெடித்து பூக்கள் பூப்பது (ஏசாயா 35: 1-2); நீரோடைகள் பாயும் வனாந்தரம் (வச. 6-7); தூக்கி எறியப்பட்ட போர்க்கருவிகள் தோட்டக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டது (2:4); வறுமையிலுள்ள மக்கள் சந்தோஷ கீதங்களால் முழுமையாவது (35: 5–6, 10) போன்ற படங்கள் வெளிப்படுகிறது.

"உலகம் எங்களுக்கு குப்பைகளை அனுப்புகிறது; நாங்கள் இசையை திருப்பி அனுப்புகிறோம்." என்று இசைக்குழு இயக்குனர் கூறுகிறார். அப்படி அவர்கள் செய்யும்போது, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உலகுக்குத் தருகிறார்கள், அப்போது தேவன் ஒவ்வொரு கண்ணின் கண்ணீரையும் துடைப்பார், வறுமை இனி இருக்காது.

அவரது குரலை அறிந்து கொள்ளுங்கள்

விடுமுறை வேதாகம பள்ளியில் ஒரு வருடம், ஆதித் - தின் தேவாலயம் வேதாகம கதைகளை விளக்குவதற்கு உயிருள்ள விலங்குகளை கொண்டு வர முடிவு செய்தது. அவன் உதவ வந்தபோது, ​​ஆதித் ஒரு ஆட்டை உள்ளே கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான். அவன் ஒரு கம்பளி மிருகத்தை உண்மையாகவே ஒரு கயிற்றால் தேவாலய மண்டபத்திற்குள் இழுத்து வர வேண்டியதாயிருந்தது. ஆனால் வாரம் செல்லச் செல்ல, அதற்கு அவனைப் பின்தொடர தயக்கம் குறைந்தது. வார இறுதிக்குள் ஆதித் இனி கயிற்றைப் பிடிக்க வேண்டியதில்லை; அது அவனை நம்பும் என்று அறிந்து அவர் ஆட்டை அழைத்தார் அது அவனை பின்தொடர்ந்தது.

புதிய ஏற்பாட்டில், இயேசு தன்னை ஒரு மேய்ப்பருடன் ஒப்பிடுகிறார், அவருடைய ஜனங்கள், ஆடுகள் அவருடைய குரலை அறிந்திருப்பதால் அவரைப் பின்பற்றுவார்கள் என்று குறிப்பிடுகிறார் (யோவான் 10: 4). ஆனால் அதே ஆடுகள் அந்நியர் அல்லது திருடனிடமிருந்து ஓடும் (வச. 5). ஆடுகளைப் போலவே, நாம் (தேவனுடைய பிள்ளைகள்) நம்முடைய மேய்ப்பரின் குரலை அவருடனான உறவின் மூலம் அறிந்துகொள்கிறோம். அப்படி நாம் செய்யும்போது அவருடைய தன்மையை நாம் காண்போம், அவரை நம்ப கற்றுக்கொள்வோம்.

நாம் தேவனை அறிந்து கொள்வதிலும் அன்புகூர்வதிலும் வளருவது, ​​அவருடைய குரலை நாம் பகுத்தறியவும், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்” அப்படி வரப்போகும் அந்த திருடனிடமிருந்தும் (வச. 10) - நம்மை ஏமாற்றி அவரிடமிருந்து நம்மைப் பிரிக்க முயற்சிப்பவர்களிடமிருந்தும், திறம்பட தப்பியோடவும் செய்யும் (வச. 5). அந்த கள்ள போதகர்களைப் போலல்லாமல், பாதுகாப்பிற்கு நேராய் நம்மை வழிநடத்த நம் மேய்ப்பரின் குரலை நாம் நம்பலாம்.

ஏதோ மிகப்பெரியது

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள புத்தகக் கடையான அக்டோபர் புத்தகங்கள் கடைக்கு அதன் சரக்குகளைத் தெரு கோடியில் உள்ள முகவரிக்கு நகர்த்த இருநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவினார்கள். உதவியாளர்கள் நடைபாதையில் வரிசையாக நின்று புத்தகங்களை ஒரு “மனித சுமக்கும்தொடர் பட்டையின்” வழியே கைமாற்றி அனுப்பினர். தன்னார்வலர்கள் செயலைக் கண்ட ஊழியர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார், “மக்கள் [உதவுவதைப்] பார்ப்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் பெரிய விஷயத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர்.”
 
நாம் நம்மை விட மிகப் பெரியகாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க முடியும். தேவன் தம்முடைய அன்பின் செய்தியை இந்த உலகிற்கு கொண்டு செல்ல நம்மை பயன்படுத்துகிறார். யாரோ ஒருவர் நம்முடன் அந்த செய்தியைப் பகிர்ந்ததால் நாம் வேறொரு நபரிடம் திரும்பி அதை பகிரலாம். பவுல் இதை இவ்வாறு ஒப்பிடுகிறார்,- தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டுவது - ஒரு தோட்டத்தை வளர்ப்பது. நம்மில் சிலர் விதைகளை நடவு செய்கிறோம், நம்மில் சிலர் விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். பவுல் சொன்னது போல், “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 3: 9).

ஒவ்வொரு வேலையும் முக்கியம். ஆனால் அனைத்தும் தேவஆவியின் வல்லமையால் செய்யப்படுகின்றன. தேவன் அவர்களை நேசிக்கிறார் மற்றும் அவர்கள் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி தம்முடைய குமாரனை அவர்களுடைய இடத்தில் மரிக்கும்படி அனுப்பினார் என்பதை அவர்கள் கேட்கும்போது தம்முடைய ஆவியால், ஆவிக்குரிய ரீதியில் அவர்கள் செழிக்க தேவன் உதவுகிறார் (யோவான் 3:16).

தேவன் உங்களையும் என்னையும் போன்ற 'தன்னார்வலர்கள்' மூலமாக பூமியில் தனது அனேகமான பணிகளை செய்கிறார். நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பங்களிப்பையும் விட மிகப்பெரிய ஒரு சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் இருந்தாலும், அவருடைய அன்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அதை வளர்க்க உதவலாம்.

ஓய்வெடுப்பதற்கான காரணம்

நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்! இதய நோய் அபாயம் உள்ள நடுத்தர வயது ஆண் நிர்வாகிகள் ஒவ்வொருவரை பற்றிய ஆய்வுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பின்லாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் பங்கேற்பாளர்களைப் பின்தொடர்ந்தனர். விஞ்ஞானிகள் தங்கள் மூல கண்டுபிடிப்புகளில் தாங்கள் தேடாத ஒன்றைக் கண்டறிந்தனர்: விடுமுறைக்கு நேரம் ஒதுக்கியவர்களில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.

வேலை என்பது வாழ்க்கையின் மிகவும் அவசியமான பகுதியாகும் - ஆதியாகமம் 3-ல் அவருடனான நம் உறவு முறிந்து போவதற்கு முன்பே தேவன் நமக்கு நியமித்த ஒரு பகுதி. தேவனின் மகிமைக்காக வேலை செய்யாதவர்கள் அனுபவிக்கும் வேலையின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றி சாலமோன் எழுதுகிறார். அதனை  "ஆர்வத்துடன் பாடுபடுவது" மற்றும் "அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது" என்று அடையாளப்படுத்துகிறார் (பிரசங்கி 2: 22-23). அவர்கள் சுறுசுறுப்பாக செயல்படாவிட்டாலும் கூட அவர்களின் “மனதுக்கு இளைப்பாறுதலில்லை” என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இன்னும் செய்து முடிக்க வேண்டியவைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் (வச. 23).
 
நாமும் சில சமயங்களில், நாம் “காற்றைத் துரத்துகிறோம்” என்பதைப்போல உணரலாம் (வச. 17). மேலும் நாம் நம் வேலையை “முடிக்க” முடியாமல் விரக்தியடைகிறோம். ஆனால் தேவன் நம் உழைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்போது - ​​நம்முடைய நோக்கம் - நாம் கடினமாக உழைத்து, ஓய்வெடுக்கவும் நேரம் எடுத்துக்கொள்ளலாம். அவர் நமக்கு அனைத்தையும் தருவதால், அவர் நம் தேவைகளை சந்திப்பவராக இருப்பதை நாம் நம்பலாம். “அவர் இல்லாமல் யாரால் உண்ணமுடியும் அல்லது இன்பம் காண முடியும்?” என்பதை சாலமோன் ஒப்புக்கொள்கிறார் (வச. 25). ஒருவேளை அந்த சத்தியத்தை நமக்கு நினைவூட்டுவதன் மூலம் நாம் அவருக்காக உத்தமமாய் பணியாற்றலாம் (கொலோசெயர் 3:23). மேலும் ஓய்வு நேரங்களுக்கு நம்மை நாம் அனுமதிக்கலாம்.